இஸ்ரேலிய சிறையில் சித்ரவதையால் உடைந்த பாலஸ்தீன சிறுவனின் கை!
இஸ்ரேலிய சிறை அதிகாரிகள் விடுதலையாவதற்கு முன்பு தன்னை கடுமையாக தாக்கியதாக பாலஸ்தீன சிறுவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போர் நிறுத்த உடன்படிக்கை மேலும் இரு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் மூன்று பாலஸ்தீன பெண்கள் மற்றும் 30 பிள்ளைகளை விடுவித்தது.
அவர்களில் Jenin நகரைச் சேர்ந்த முகமது நஸா (Mohammed Nazza) என்ற சிறுவனின் கைகளில் கட்டுபோடப்பட்டிருந்தது.
இஸ்ரேலிய சிறைக்காவலர்கள் தன்னை தாக்கியதால் கை உடைந்ததாக சிறுவன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் இது தனக்கு நடந்ததாக கூறிய சிறுவன் முகமது நஸா, விடுதலை செய்யப்படுவதற்கு முன் மீண்டும் காவலர்கள் தன்னை தாக்கியதாக கூறியுள்ளார்.
அத்துடன் தனக்கு மருத்துவ சிகிச்சை வழங்கவும் மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.