உலகம்செய்திகள்

கடவுளின் பெயரால் பதிலடி கொடுக்கப்படும்! பாகிஸ்தானால் எச்சரிக்கை

Share
10 1
Share

நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று இந்தியாவிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் முறுகல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

“பாகிஸ்தான் மீது இந்தியா படையெடுக்க வாய்ப்புள்ளதால், வான்வழி, கடல்வழி அல்லது தரைவழியாக இந்தியாவின் எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள இராணுவத்தை தமது நாடு தயார் நிலையில் வைத்துள்ளது.

குறிப்பாக பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்தும் எந்தவொரு சூழ்நிலையும் “கடவுளின் பெயரால்” தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

நாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும்” என பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாம் புரூஸ், இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதம் ஏந்திய நாடுகள் என்றும், வளர்ந்து வரும் இராணுவ சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் தங்கள் வெளியுறவு அமைச்சர்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.

ஆனால், காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானைத் தாக்க இந்தியப் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு அனுமதி அளித்துள்ளார்.

இதன்படி தாக்குதல்களை எப்போது, ​​எங்கு நடத்துவது என்பதை முடிவு செய்ய நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு இந்தியப் பிரதமர் முழுமையான செயல்பாட்டு சுதந்திரத்தை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share
Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...