இந்தியாவுடன் அமைதியை ஏற்படுத்துவதற்கான பல வாய்ப்புக்களை பாகிஸ்தான் தவற விட்டதாக இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அதிவேக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டு போர் பதற்றத்தை அதிகரித்ததாக பாகிஸ்தான் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், போர் தொடர்பில் பாகிஸ்தான் அதன் முன்னோட்டத்தை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அமைதியான சூழ்நிலைக்கு திரும்புவதற்கான வாய்ப்பை பாகிஸ்தான் இழந்து விட்டதாகவும் ஷ்ரிங்லா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பாகிஸ்தானின் எந்தவொரு தாக்குதலுக்கும் இந்தியா பதிலடி வழங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.