3 2 scaled
உலகம்செய்திகள்

ஈரானுக்கு பயத்தை காட்டிய ஆசிய நாடு: இரண்டு நாட்களுக்கு பிறகு பழிக்குப் பழி

Share

பயங்கரவாதிகள் முகாம்களை அழிப்பதாக கூறி ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு, இரண்டு நாட்களுக்கு பிறகு பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கியுள்ளது.

ஈரான் மீது பாகிஸ்தான் முன்னெடுத்த வான் தாக்குதலில் நான்கு சிறார்கள் உட்பட 7 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் தெரிவித்த அதே காரணத்தையே தற்போது பாகிஸ்தானும் தெரிவித்துள்ளது.

ஈரான் தாக்குதல் முன்னெடுத்த இரண்டு நாட்களுக்கு பின்னர் பாகிஸ்தான் பழிக்குப் பழி வாங்கியுள்ளது. இரு நாடுகளும் தங்கள் எல்லையில் உள்ள பிராந்தியங்களில் இருந்து தாக்குதல்களை நடத்தும் போராளிக் குழுக்களுக்கு அடைக்கலம் கொடுப்பதாக நீண்ட காலமாக ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டி வருகின்றன.

ஆனால் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகாரப்பூர்வ ராணுவ நடவடிக்கை என்பது அசாதாரணமானதாகவே பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே உறவில் விரிசல் இருந்தாலும், பொதுவாக இணக்கமான சூழலையே காப்பாற்றி வந்துள்ளனர்.

ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரகம் உறுதி செய்துள்ளது. ஆனால் இந்த தகவலை ஈரான் ஊடகங்கள் புதன்கிழமை மதியத்திற்கு மேல் வெளியிட்டிருந்தது.

ஈரான் தாக்குதலை அடுத்து கடும் பின்விளைவுகள் குறித்து பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்திருந்தது. மட்டுமின்றி, பாகிஸ்தானுக்கான ஈரான் தூதரை நாடு திரும்ப தடை விதித்தது, பாகிஸ்தானில் இருந்தும் தனது சொந்த தூதரை ஈரான் திரும்பப் பெற்றது.

பாகிஸ்தான் மக்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்படவில்லை என்றும் பயங்கரவாத அமைப்பு மீது மட்டுமே தாக்குதல் நடத்தியதாகவும் ஈரான் விளக்கமளித்திருந்தது. இந்த வார தொடக்கத்தில் ஈராக் மற்றும் சிரியா மீதும் ஈரான் தாக்குதலை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
crime arrest handcuffs jpg
பிராந்தியம்இலங்கைசெய்திகள்

அதிபர் மற்றும் மகன் கைது: ₹ 20 மில்லியன் மதிப்புள்ள ஹெராயினுடன் எப்பாவல ஹோட்டலில் சிக்கினர்!

அனுராதபுரம், எப்பாவல பகுதியில் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள ஹெராயினுடன் (Heroin) ஒரு பாடசாலை...

10 signs symptoms of drug addiction scaled 1
செய்திகள்இலங்கை

கொழும்பில் அதிர்ச்சி: போதைப்பொருளுக்கு அடிமையாகும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு – அமைச்சகம் கடும் கவலை!

கொழும்பு மற்றும் அருகிலுள்ள நகரங்களில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது குறித்துச்...

25 68747c5f98296
செய்திகள்இலங்கை

நடிகர் சரத்குமார் இலங்கை வருகை: நான்கு நாட்கள் தங்கத் திட்டம்!

பிரபல தென்னிந்தியத் திரைப்பட நடிகர் சரத்குமார், இன்று (நவ 05) காலை இலங்கையை வந்தடைந்தார். நாட்டின்...

24 6694ccce98702
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபம் தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற கோர விபத்து: நால்வர் நீரில் மூழ்கி பலி!

சிலாபம் – தெதுறு ஓயா ஆற்றில் இன்று (நவ 06) நீராடச் சென்ற ஒரு சுற்றுலா...