உலகம்செய்திகள்

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் போட்டிகள்

3 11
Share

பாகிஸ்தானின் 20க்கு 20 கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்படும் என்று பாகிஸ்தானிய கிரிக்கெட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராவல்பிண்டி மைதானத்துக்கு அருகில் இந்திய ட்ரோன் ஒன்று வீழ்ந்து வெடித்தமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை குறிவைத்து வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சி என்று பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் எதனையும் வழங்கவில்லை. இந்தநிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு மாற்றப்பட்டுள்ளன என்பதை பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் உறுதிப்படுத்தியுள்ளது.

வீரர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலையும் விளையாட்டுகளையும் பிரித்து வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில், எப்போதும் பாகிஸ்தான் உறுதியாக இருந்து வருகிறது.

இருப்பினும், மைதானத்தை குறிவைத்து இந்தியா நடத்திய தாக்குதல் மிகவும் பொறுப்பற்றது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

முன்னதாக, முன்னாள் செம்பியன்களான கராச்சி கிங்ஸ் மற்றும் பெசாவர் ஸல்மி ஆகிய அணிகள், வியாழக்கிழமை ராவல்பிண்டி மைதானத்தில் விளையாடவிருந்தன.

ஆனால், இந்தியாவின் ட்ரோன் ஒன்று மைதானத்திற்கு அருகில் விழுந்ததால் போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில் பாகிஸ்தானின் ப்ரீமியர் லீக் போட்டிகளில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஸ், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட முப்பத்தேழு வெளிநாட்டு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Share
Related Articles
1 10
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கான உறுப்பினர்களை நியமிப்பதில் கட்சிக்குள் பல...

2 20
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் விசேட அறிவிப்பு

Local Government Election Sri Lanka Announcement   2025 உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்ட அனைத்து...

8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...