20 8
உலகம்செய்திகள்

இந்தியா பின்வாங்கினால் நாங்களும் நிறுத்த தயார்! பாகிஸ்தான் அறிவிப்பு

Share

இந்திய இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் பதற்றத்தை குறைக்க தயாராக இருக்கிறோம் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய இராணுவம் பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்தியுள்ளது.

மொத்தம் 9 இடங்களில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் 21 பயங்கரவாத முகாம்களில், 9 பயங்கரவாத உள்கட்டமைப்புகள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டதாக இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தாக்குதலை நாங்கள் நிறுத்த தயார் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், “பாகிஸ்தான் எந்த விரோதப் போக்கையும் தொடங்காது. ஆனால் தாக்குதலை தொடர்ந்தால் பதிலடி கொடுப்போம்.

கடந்த இரண்டு வாரங்களாக இந்தியாவிற்கு எதிராக எந்த விரோத நடவடிக்கையையும் தொடங்க மாட்டோம் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.

இருப்பினும், நாங்கள் தாக்கப்பட்டால் நாங்கள் பதிலடி கொடுப்போம். இந்தியா இதில் பின்வாங்க முடிவு செய்தால், இந்த பதற்றத்தை குறைக்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம்” என்றார்.

மேலும் அவர், இந்த கட்டத்தில் இரு நாடுகளுக்கும் இடையே திட்டமிடப்பட்டுள்ள எந்தவொரு இராஜதந்திர ஈடுபாடுகள் அல்லது பேச்சுவார்த்தைகள் குறித்தும் எனக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...