போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

28 3

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதனை தொடர்ந்து, இந்தியா எல்லை பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், 15 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 45 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு தக்க பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரீப் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, பாகிஸ்தான் மற்றும் இந்தியா மற்றும் இடையே பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் இந்தியாவுடனான போரில் வெற்றி பெற்றால், நடிகை மாதுரி தீட்சித்தை என்னுடன் அழைத்து செல்வேன் என பேசியுள்ளார்.

அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

57 வயதான மாதுரி தீட்சித் 1980,1990 காலகட்டத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

1999 ஆம் ஆண்டில், டாக்டர் சிறீராம் மாதவ் நேனேவை என்பவரை மாதுரி தீட்சித் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரு மகன்கள் உண்டு.

Exit mobile version