24 663f70bbe63c8
உலகம்செய்திகள்

பாண்டாவாக மாறிய நாய்! ஏமாற்றிய பூங்கா

Share

பாண்டாவாக மாறிய நாய்! ஏமாற்றிய பூங்கா

சீனாவில் சௌ சௌ இன நாய்களுக்கு கருப்பு வெள்ளை வர்ணம் பூசி பாண்டா கரடியாக மாற்றி பார்வையாளர்களை பூங்கா நிர்வாகம் ஏமாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவமானது சீனாவின் தைசௌ உயிரியல் பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், சௌ சௌ இன நாயை பாண்டா என நினைத்து தினமும் ஏராளமானோர் காணக் குவிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பார்வையாளர்களுக்கு கூடுதல் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

“எங்கள் பூங்காவில் பாண்டா இல்லாததால் இப்படி செய்தோம் எனவும், நாம் முடிக்கு டை அடிப்பதுபோல்தான் இதுவும். இதனால் நாய்க்கு எந்த பாதிப்பும் இல்லை’ என பூங்கா நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை இதற்கு முன்பு சீனாவில் உள்ள ஹாங்சோ உயிரியல் பூங்காவில் ஏஞ்சலா என்ற பெயர்கொண்ட மலேசிய சூரிய கரடி பார்ப்பதற்கு மனிதனை போல தோற்றமளித்ததால் பார்வையாளர்கள் அதை கரடி வேஷம் போட்ட மனிதன் என்று தவறாக புரிந்து கொண்ட சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....