உலகம்செய்திகள்

சம்பளத்துடன் ஒரு மாத விடுமுறை! – தம்பதிகளுக்கு சீனா சலுகை

Share
wedding
Share

சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு, சீனாவில் 1,000 பேருக்கு 6.77 பிறப்புகள் என்ற மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை பதிவு செய்தது.

இதனால், மக்கள் தொகையை அதிகரிக்க சீனா பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறது. இந்நிலையில், திருமணத்தை ஊக்குவிக்கவும், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கவும் சீனாவில் உள்ள சில மாகாணங்கள் இளம் புதுமணத் தம்பதிகளுக்கு 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

அதன்படி, வடமேற்கு மாகாணமான கன்சு மற்றும் நிலக்கரி உற்பத்தி செய்யும் மாகாணமான ஷாங்க்சி ஆகியவை 30 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குகின்றன.

இதுகுறித்து, தென்மேற்கு நிதி மற்றும் பொருளாதார பல்கலைக்கழகத்தின் சமூக மேம்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் டீன் யாங் ஹையாங் கூறுகையில், “திருமண விடுமுறையை நீட்டிப்பதன் மூலம் கருவுறுதல் விகிதம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. திருமண விடுப்பு நீட்டிப்பு முக்கியமாக சில மாகாணங்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நகரங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது” என்றார்.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...