வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை!!
வடகொரியா மீண்டும் தொலைதூர இலக்கை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை சோதனையில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்கா– வடகொரியா இடையே நீண்டகால மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் அமெரிக்கா மீதான மோதலைஅதிகரிக்கும் வகையில் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றது.
அத்துடன் அணு ஆயுத வல்லமை கொண்ட வடகொரியா தமது ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கும் வெளிப்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் புதிதாக உருவாக்கிய ஏவுகணையை வடகொரியா சோதனை செய்துள்ளது.
தொலைதூர இலக்கை துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டதாக உள்ள இந்த ஏவுகணை, 1,500 கிலோமீற்றர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழித்துள்ளது என வடகொரியா தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக ஏவுகணை சோதனையில் ஈடுபடாத வடகொரியா தற்போது மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளமை உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.
Leave a comment