பாகிஸ்தான் அணு உலைகளில் கசிவு ஏற்பட்டதா..! வெளியானது புதிய தகவல்

20 16

பாகிஸ்தானில் உள்ள எந்த ஓர் அணு உலையில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு இல்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) உறுதிபட தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து கடந்த 7-ம் தேதி ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது. இந்த மோதலின்போது பாகிஸ்தானின் அணுசக்தி நிலையங்கள் அமைந்துள்ள கிரானா மலைகளை இந்தியா தாக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்தநிலையில், பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு அல்லது வெளியீடு எதுவும் இல்லை என்று உலகளாவிய அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தெரிவித்துள்ளது.

அதன் செய்தித் தொடர்பாளர் அளித்த பேட்டியில், “சர்வதேச அணுசக்தி முகமைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு அணுசக்தி நிலையத்தில் இருந்தும் கதிர்வீச்சு கசிவு அல்லது வெளியீடு எதுவும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version