Nigeria iii
உலகம்செய்திகள்

நைஜீரியா – சிறை தகர்ப்பு! – 240 கைதிகள் தப்பிப்பு

Share

நைஜீரியா – கோசி மாகாணத்தில் ஹப்பா நகரிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் தடுப்புச் சுவரை சக்தி வாய்ந்த வெடி குண்டு மூலம் தகர்த்து உள் நுழைந்த பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இதன் மூலம் சிறையிலிருந்து 240 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.  2 சிறைக்கைதிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சிறையில் 224 விசாரணை கைதிகள் மற்றும் 70 குற்றவாளிகள் உள்ளிட்ட மொத்தம் 294 கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பயங்கரவாதிகள் சிறைச்சாலையின் தடுப்பு சுவரில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து தகர்த்து உள்ளே நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

தப்பியோடிய கைதிகளை பிடிக்க தேடுதல் வேட்டை துரிதகதியில் நடைபெறுகிறது. கைதிகள் பற்றிய தகவலை இன்டர்போல் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளோம். கைதிகளை தப்பவைத்து பயங்கரவாதிகளையும் விரைவில் பிடிப்போம் – என அந் நாட்டு உள்துறை அமைச்சர் ராப் அரெக்பசுலோ தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...