ஆப்கானில் புதிய அரசு – தலிபன்கள் தெரிவிப்பு!
ஈரான் நாட்டில் இருப்பதுபோன்று ஆப்கானிஸ்தானிலும் அரசு அமைக்க உள்ளோம் என தலிபன்கள் தெரிவித்துள்ளனர்.
அதாவது தலிபன்களின் உயர் மட்டத் தலைவர், அதிபராகவோ அல்லது பிரதமராகவோ பொறுப்பேற்று அரசியல் மற்றும் மதரீதியான விவரங்களுக்கு அப்பாற்பட்டு செயற்படுவார்.
இந்த பதவியை தலிபன் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதாவுக்கு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த 31ஆம் திகதியுடன் அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக ஆப்கானிலிருந்து வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபன்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
அதன்படி ஆப்கானில் தலிபன்கள் தலைமையிலான புதிய அரசு அமையவுள்ளது என ரஷ்யாவின் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
Leave a comment