Alarming gap in global response to COVID 19
உலகம்செய்திகள்

மீண்டும் புதிய கொரோனா அலைகள்! – WHO எச்சரிக்கை

Share

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது.

தற்போது புதிய உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வகை மாறுபாடுகளில் பல நாடுகளால் நோய் தொற்று பரவி வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறும்போது,

“கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இது சுகாதார அமைப்புகள் மற்றும் சுகாதார பணியாளர்கள் மீது மேலும் அழுத்தம் கொடுக்கிறது. இறப்புகளின் போக்கு அதிகரித்து வருவது குறித்தும் கவலைப்படுகிறேன்.

ஒமைக்ரானின் துணை வகைகளான பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 போன்றவை உலகம் முழுவதும் பாதிப்புகள், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவது மற்றும் இறப்பு ஆகியவற்றின் அலைகளை தொடர்ந்து இயக்குகின்றன என்று கூறி இருந்தார்.

இந்த நிலையில் புதிய கொரோனா வைரஸ் அலைகள் வர வாய்ப்பு உள்ளது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமி நாதன் கூறியதாவது:-

கொரோனாவின் புதிய அலைகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு புதிய மாறுபாடும் மிகவும் பரவக்கூடியதாகவும் நோய் எதிர்ப்பு சக்தியை தவிர்க்கக் கூடியதாகவும் இருக்கும். அதிக எண்ணிக்கையில் பாதிப்பு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுதல் இருக்கலாம். தற்போது மாறி வரும் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து நாடுகளும் தரவு சார்ந்த திட்டத்தை வைத்திருக்க வேண்டும் என்றார்.

சமீப காலமாக உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....