குப்பை லொறியில் சிக்கி மகள் கண்முன்னே தாய் பலி
உலகம்செய்திகள்

குப்பை லொறியில் சிக்கி மகள் கண்முன்னே தாய் பலி

Share

குப்பை லொறியில் சிக்கி மகள் கண்முன்னே தாய் பலி

குப்பை லொறி சக்கரத்தில் சிக்கி மகளின் கண்முன்னே தாய் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய மாநிலம் தமிழகத்தில் உள்ள சென்னை ஆவடியை அடுத்த சேக்காடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் ரவி மற்றும் வரலட்சுமி (46). இவர்களுக்கு குணாளினி (20) என்ற மகள் உள்ளார்.

தாய் மற்றும் மகள் இருவரும் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்கள். அதன்படி இருவரும், நேற்று வழக்கம்போல் மொபட்டில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். மகள் குணாளினி மொபட்டை ஓட்டினார். பின்னால் வரலட்சுமி அமர்ந்து சென்றார்.

அப்போது, பூந்தமல்லி – மவுண்ட் சாலையில் காட்டுப்பாக்கம் அருகே சென்ற போது பின்னால் வந்து கொண்டிருந்த குப்பை லொறி மொபட்டின் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி தாய், மகள் இருவரும் கீழே விழுந்தனர்.

அப்போது, கீழே விழுந்த வரலட்சுமி மீது குப்பை லொறியின் சக்கரம் ஏறியது. அப்போது, உடல் நசுங்கி மகள் கண்முன்னே தாய் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில், மகள் குணாளினி லேசான காயத்துடன் உயிர் தப்பி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, குப்பை லொறி ஓட்டிவந்த டிரைவர் தப்பி ஓடினார். மேலும், இச்சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்பை லொறி டிரைவரை தேடி வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
image 5f59f82859
செய்திகள்உலகம்

உக்ரைன் எரிசக்தி நிலையங்கள் மீது ரஷ்யா சரமாரித் தாக்குதல்: நாடு முழுவதும் அவசர மின்வெட்டு அமல்!

கிறிஸ்துமஸ் வாரத்தை முன்னிட்டு, உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்புகளைச் சீர்குலைக்கும் நோக்கில் ரஷ்யா முன்னெடுத்த பாரிய வான்வழித்...

trump battile ships
செய்திகள்உலகம்

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய போர்க்கப்பல் திட்டத்தை அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கக் கடற்படையின் பலத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் புதிய மற்றும்...

image 99752a50f1
செய்திகள்உலகம்

போலி ஏ.ஐ. ட்ரெய்லர்கள்: ஒரு பில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்த 2 யூடியூப் தளங்களை முடக்கியது கூகுள்!

செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட போலித் திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (Fake Trailers) வெளியிட்டு,...

images 1 8
செய்திகள்உலகம்

அவுஸ்திரேலியாவில் புதிய கட்டுப்பாடுகள்: துப்பாக்கி உரிமம் மற்றும் போராட்டங்களுக்குக் கடும் தடை!

சிட்னி போண்டி (Bondi) கடற்கரையில் இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் (NSW) மாநில...