சீனாவின் கடன் வலையில் சிக்கிய நாடுகள்! முதலிடத்தில் இருப்பது எந்த நாடு தெரியுமா
பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் நாடுகளுக்கும் வறுமையில் இருக்கும் நாடுகளுக்கும் தானாக முன்வந்து உதவி செய்து அவர்களை தன்னுடைய கடன்காரர்களாக மாற்றும் வழிமுறையை சீனா (China) காலம் காலமாக பின்பற்றி வருகிறது.
அதன்படி, பாகிஸ்தான் சீனாவிற்கு கிட்டத்தட்ட 2.1 லட்சம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்த வேண்டியிருக்கிறது. சாலை மற்றும் எரிசக்தி திட்டங்கள், துறைமுகத் திட்டங்களுக்கு சீனா பெருமளவு கடன் வழங்கியுள்ளது.
அங்கோலா (Angola) நாடு சீனாவிற்கு 2.1 லட்சம் கோடி ரூபாய் கடன் தொகையை திரும்ப வழங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எண்ணெய் மற்றும் வைரம் வளங்கள் நிறைந்த இந்த நாடு உட்கட்டமைப்பு பணிகளான சாலை, தொடருந்து மற்றும் வீட்டு மேம்பாட்டு திட்டங்களுக்கு சீனாவிடம் பெரிய அளவிலான தொகையை கடனாக வாங்கியுள்ளது.
இலங்கை (Sri Lanka) சீனாவிடம் கிட்டத்தட்ட 74,000 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி இருக்கிறது. இலங்கையும் துறைமுகங்கள், விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் கட்டுமான பணிகளுக்காக சீனாவிடம் இந்த கடனை வாங்கியுள்ளது.
அடுத்தது எதியோப்பியா (Ethiopia) சீனாவிடம் 56,000 கோடி கடனை வாங்கி இருக்கிறது. குறிப்பாக தகவல் தொடர்பு துறை மற்றும் தொழில் மேம்பாட்டுக்காக இந்த கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
Comments are closed.