24 65fd533d21459
இந்தியாஉலகம்செய்திகள்

சீமானுக்கு பறிபோனது விவசாயி சின்னம்! கொடுக்கப்பட்டது புதிய சின்னம்

Share

சீமானுக்கு பறிபோனது விவசாயி சின்னம்! கொடுக்கப்பட்டது புதிய சின்னம்

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் திகதி தொடங்கி ஜூன் 1-ம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

தேர்தலுக்கான தொகுதி பங்கீடு வேட்பாளர் அறிவிப்பு பிரச்சாரம் என தேர்தல் பணிகளில் கட்சிகள் ஆர்வம் காட்டி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி மட்டும் சின்னம் தொடர்பான சிக்கலில் சிக்கியிருந்தது.

இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தல்களில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட கரும்பு விவசாயி சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொண்டதால் நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் பறிபோனது.

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் வேறொரு சின்னத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது.

இந்த நிலையில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கி உள்ளது.

இருப்பினும் நாம் தமிழர் கட்சி வேறு சின்னத்தை கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 14
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை: மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை...

17 13
இலங்கைசெய்திகள்

நான்கு தமிழ் இளைஞர்கள் பரிதாப மரணம்

புத்தளம் (Puttalam) மாவட்டம், வென்னப்புவ கடலில் மூழ்கி நால்வர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். மேற்படி நால்வரும் குளித்துக்...

19 13
இலங்கைசெய்திகள்

இறம்பொட கோர விபத்து : 23ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை

கொத்மலை, ரம்பொட கரண்டியெல்ல பகுதியில் கடந்த 11 ஆம் திகதி நடந்த பேருந்து விபத்தில் படுகாயமடைந்து...

18 13
இலங்கைசெய்திகள்

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்

கொழும்பு செட்டியார் தெருவில் 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 240,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. இன்று...