உலகம்செய்திகள்

இனப்படுகொலையை ஆதரிக்கிறீர்கள்! ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த மக்கள்

Share
4 scaled
Share

இனப்படுகொலையை ஆதரிக்கிறீர்கள்! ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த மக்கள்

அமெரிக்காவின் மிச்சிகன் நகருக்கு சென்ற ஜனாதிபதி ஜோ பைடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனிய ஆதரவாளர்கள் திரண்டனர்.

மிச்சிகன் நகருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் வருகை புரிந்தபோது, பாலஸ்தீன ஆதரவாளர்கள் பலர் கையில் பதாகைகளுடன் அவருக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அவர்கள், ‘பைடன் பைடன் உங்களை பார்க்க முடியவில்லை, நீங்கள் கொலைக் களத்தில் இருக்கிறீர்கள்’ என்று கூச்சலிட்டனர்.

அத்துடன் ஜோ பைடன் இனப்படுகொலையை ஆதரிப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சிலரின் பதாகைகளில், ஏமனை கைவிட்டு, பொதுத்தேர்தலில் அவருக்கு வாக்களிக்க மாட்டோம் என்று எழுதியிருந்தனர்.

எனினும் கலகத் தடுப்புப் பொலிஸார் அவர்களை சுற்றி வளைத்து தடுத்தனர். மிச்சிகனுக்கு பிரச்சார பயணத்தில் ஜோ பைடன் தொழிற்சங்க ஊழியர்களை சந்தித்தார்.

ஆனால் அவரால், காசாவில் போர் மற்றும் மத்திய கிழக்கில் சுழலும் பதட்டங்கள் பற்றிய சர்ச்சையில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...