25
உலகம்செய்திகள்

கணவனை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற மனைவி: பின்னர் நடந்த பயங்கரம்

Share

மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தன் கணவனை அழைத்துச் சென்ற பெண்ணொருவர், அவர் மீது காரை ஏற்றிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் வாழும் கணவர்கள் எல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டுதான் வாழவேண்டும் போலிருக்கிறது.

ராஜா ரகுவன்ஷியை அவரது மனைவியான சோனம் கொன்றது துவங்கி, சில வட மாநிலங்களில் கணவர்கள் அச்சத்துடனேயே வாழும் நிலை உருவாகியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பூஜா என்னும் பெண், தன் கணவரான பிக்குவை மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்வதாகக் கூறி Gaya என்னுமிடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால், வீட்டுக்குத் திரும்பும் வழியில், தன் காதலனான கமலேஷ் யாதவ் என்பவருடன் சேர்ந்து, பிக்கு மீது காரை ஏற்றிக் கொன்றுள்ளார் பூஜா.

பிக்கு சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, பூஜாவை பொலிசார் கைது செய்ய, விசாரணையில் தன் காதலனுடன் சேர்ந்து தன் கணவரைக் கொலை செய்ததை பூஜா ஒப்புக்கொண்டுள்ளார்.

தலைமறைவாகிவிட்ட கமலேஷ் யாதவை பொலிசார் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.

Share
தொடர்புடையது
20 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் வீசும் முயற்சி முறியடிப்பு: இளைஞர் ஒருவர் கைது!

காலி சிறைச்சாலையின் பாதுகாப்பை மீறி, அதன் மதிலுக்கு மேலால் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை உள்ளே...

19 16
செய்திகள்விளையாட்டு

92 ஆவது “புனிதர்களின் சமர்” கிரிக்கெட் போட்டி: வெற்றியின்றிச் சமநிலையில் நிறைவு!

கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான வரலாற்றுச்...

18 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெலுவ மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை!

காலி மாவட்டம், நெலுவ – மாதுகெட்ட பகுதியில் பாயும் கிங் கங்கையில் (Gin Ganga) மிதந்தவாறு...

17 18
செய்திகள்உலகம்

ஈரானின் நடன்ஸ் அணுசக்தி நிலையம் மீது மீண்டும் தாக்குதல்: சர்வதேச விதிகள் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றச்சாட்டு!

ஈரானின் மிக முக்கியமான மற்றும் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும்...