24
உலகம்செய்திகள்

பக்தர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் உலகின் முதல் AI கடவுள்

Share

AI தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து, அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி வருகிறது.

AI யின் வளர்ச்சி காரணமாக தங்களின் வேலை பறிபோகும் என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது. தற்போது கடவுளுக்கு பதிலாகவும், AI அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவின் ஜோகூரில் உள்ள தியான்ஹோ கோயில், உலகின் முதல் AI கடவுளை அறிமுகம் செய்துள்ளது. இந்த AI MAZU, சீனக் கடல் தெய்வத்தின் டிஜிட்டல் அவதாரமாகும்.

மலேசியாவை சேர்ந்த Aimazin என்ற தொழில்நுட்ப நிறுவனம், இந்த AI MAZU-வை உருவாக்கியுள்ளது.

டிஜிட்டல் திரையில் காட்டப்படும் இந்த AI கடவுள், பக்தர்களுடன் உரையாடல்களில் ஈடுபடவும், அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், வழிகாட்டுதலை வழங்கவும் செய்கிறது.

அந்த நிறுவனத்தின் நிறுவனரான Shin Kong, எதிர்பாராத செல்வத்தைப் பெறுவது எப்படி என AI மசுவிடம் கேட்டதற்கு, வீட்டிலேயே இருப்பது அத்தகைய செல்வத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என பதிலளித்தது.

இதனையடுத்து, தூக்கமின்மைக்கு தீர்வு வழங்குமாறு பெண் ஒருவர் கேட்டதற்கு, அவரது தனது குழந்தை என அழைத்த AI மசு, இரவில் உறங்க செல்வதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரை அருந்துமாறு அறிவுறுத்தியது.

ஏப்ரல் 20, 2025 அன்று மசு என்ற கடல் தெய்வத்தின் 1,065 வது பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில், அதனை முன்னிட்டு AI மசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவின் மெய்சோ தீவில், 960 ஆண்டில், லின் மோவாகப் பிறந்த பெண், கப்பல் விபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றி, சொர்க்கத்திற்கு சென்றதாக நம்பும் மக்கள், மசு என்ற பெயரில் கடல் தெய்வமாக வணங்குகின்றனர்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மில்லியன் கணக்கான மக்கள் இந்த மசு கடவுளை வணங்குகின்றனர்.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...