14 26
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ள ஜேர்மன் கட்சி

Share

புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ள ஜேர்மன் கட்சி

ஜேர்மனியில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இரண்டாவது பெரும் கட்சியாக வெற்றிபெறலாம் என கருதப்படும் கட்சி ஒன்று, புலம்பெயர்ந்தோரை மொத்தமாக நாடுகடத்த திட்டம் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜேர்மனியின் Saxony மாகாணத்திலுள்ள Riesa நகரில், சமீபத்தில், புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சி மாநாடு ஒன்றை நடத்தியது.

அடுத்த மாதம் 23ஆம் திகதி ஜேர்மனியில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அந்த மாநாடு நடைபெற்றது.

அந்த கட்சி நடத்தும் மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் ஏராளமானோர் Riesa நகரில் சாலைகளில் திரண்டு பேரணி நடத்தியது நினைவிருக்கலாம்.

இந்நிலையில், AfD கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சர்ச்சைக்குரிய பல திட்டங்களை முன்வைத்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

AfD கட்சியின் தலைவரான ஆலிஸ் (Alice Weidel), வெளிப்படையாக ’remigration’ என்னும் ஒரு விடயம் குறித்து பேசியுள்ளார்.

அதன் பொருள், ஜேர்மனியிலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்றும் அல்லது நாடுகடத்துவது ஆகும்.

அத்துடன், ஜேர்மன் எல்லைகளை மூடுவது, மீண்டும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கத் துவங்குவது, பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது, யூரோ நாணயத்தை கைவிடுவது மற்றும் புதிய மாகாணங்களின் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது ஆகிய சர்ச்சைக்குரிய பல விடயங்களை தனது தேர்தல் அறிக்கையில் AfD கட்சி முன்வைத்துள்ளது.

கூட்டத்தில் பேசிய கட்சித் தலைவரான ஆலிஸ், பெரிய அளவில் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்களை நாடுகடத்த இருப்பதாகவும், அதை தான் remigration என அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த AfD கட்சிக்குதான் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துவருகிறார் என்பது இன்னொரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share
தொடர்புடையது
26 6990101d03ddb
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய நிதிப் பின்னணி: ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை கோரும் நாமல் ராஜபக்ஷ!

இலங்கையில் 2022-ஆம் ஆண்டு இடம்பெற்ற ‘அரகலய’ போராட்டம் தொடர்பாகவும், அதற்கு வெளிநாடுகளில் இருந்து கிடைத்ததாகக் கூறப்படும்...

dailythanthi 2026 02 14 giawqio6 pul
செய்திகள்இந்தியா

புல்வாமா வீரர்களுக்கு 7-ம் ஆண்டு வீரவணக்கம்: நாடு முழுவதும் கருப்பு தினம் அனுசரிப்பு!

கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் திகதி, ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற...

1763708534 drug 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போதைப்பொருள் கும்பலுக்கு மரண அடி! – ஒரே நாளில் 820 பேர் கைது.

இலங்கை அரசாங்கம் மற்றும் காவல்துறை இணைந்து முன்னெடுத்து வரும் ‘நேஷன் யுனைடெட் – நேஷனல் டிரைவ்’...

images 14
செய்திகள்அரசியல்இலங்கை

நுரைச்சோலையில் பாரிய நிலக்கரி ஊழல்? – 5 கப்பல்களும் தரமற்றவை என சஜித் பிரேமதாச அதிரடி குற்றச்சாட்டு!

நுரைச்சோலையில் அமைந்துள்ள லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்காக அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி...