இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்
உலகம்செய்திகள்

இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

Share

இந்தியர்களை கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்கு கடத்திய நபர்: வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்

இந்தியர்களை கனடா வழியாக அமெரிக்காவுக்குள் கடத்தியதாக ஒன்ராறியோவில் வாழ்ந்துவந்த இந்தியர் ஒருவர் அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

Simranjit (Shally) Singh (41) என்னும் நபர், இந்தியர்களை கடத்திய விதம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்தியர்களை கால்கரி, ரொரன்றோ மற்றும் மொன்றியலுக்கு விமானம் மூலம் வரவழைக்கும் சிங், பின்னர் அவர்களை ஒன்ராறியோவிலுள்ள கார்ன்வாலுக்கு கொண்டுசென்று, அங்கிருந்து படகு மூலம் St. Lawrence நதிவழியாக அமெரிக்காவுக்குள் அனுப்பிவந்துள்ளார்.

தான் 1,000க்கும் மேற்பட்டவர்களை கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் கடத்தியுள்ளதாக சிங் பெருமை பீற்றிக்கொண்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டு அமெரிக்க சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ள சிங், 2010ஆம் ஆண்டு மனைவி மற்றும் பிள்ளையுடன் இந்தியாவிலிருந்து கனடாவுக்கு வந்து அகதி நிலை கோரியுள்ளார். பின்னர் அவரது தாயும் சிங்குடைய மற்றொரு பிள்ளையும் கனடா வந்து அவர்களும் அகதி நிலை கோரியுள்ளனர். ஆனால், அனைத்துக் கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கனடா அதிகாரிகள் சிங்கை நாடுகடத்த முயன்றும், இந்திய தூதரகம் பயண ஆவணங்களை வழங்க மறுத்ததால், அவரை நாடுகடத்த முடியாமல்போயிருக்கிறது.

சிங் கனடாவில் ஒரு பெண்ணை இரண்டாவதாக மணந்துகொள்ள, அந்தப் பெண் சிங்கை ஸ்பான்ஸர் செய்ய, ஆனால், அந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்படும் முன் சிங் கைது செய்யப்பட்டுவிட்டார்.

டிசம்பர் மாதம் 28ஆம் திகதி சிங்குக்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அவருக்கு ஐந்து முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதுடன், அவர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68fb9443b29cd
செய்திகள்இலங்கை

உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி...

25 68fbf3f9586ce
செய்திகள்உலகம்

அமெரிக்க அரசாங்க முடக்கத்தால் விமான சேவைகள் பாதிப்பு: 10 முக்கிய நகரங்களில் ஒரு மணி நேர தாமதம்!

அமெரிக்காவின் (United States) முக்கிய நகரங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

l19420250910170027
செய்திகள்இலங்கை

மெட்டா மற்றும் டிக் டாக் மீது ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு: வெளிப்படைத்தன்மை விதிகளை மீறியதாக அபராதம் விதிக்க வாய்ப்பு!

ஐரோப்பிய யூனியன், மெட்டா (Meta) மற்றும் டிக் டாக் (TikTok) ஆகியவற்றின் மீது குற்றம்சாட்டடொன்றை முன்வைத்துள்ளது....

images 1 6
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் குருநகரில் 200 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (24) போதைபொருளுடன்...