ஒமைக்ரோனுக்கு எதிராக தங்கள் தடுப்பு மருந்துகள் வேலை செய்யுமா என்பதை உறுதியாக கூற இயலவில்லை என பிரபல மருந்து நிறுவனங்களான ஃபைசர் மற்றும் பயான்டெக் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் அறிவியல் இதழ் செய்தி வெளியிடுகையில்,
தென்ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரோன் என்ற உருமாறிய கொரோனாவை உலக அளவில் இப்போது சந்தையில் கிடைக்கும் தடுப்பூசி மற்றும் மருந்துகள் தடுக்கும் வாய்ப்பு குறைவு .
ஒமைக்ரோன் கொரோனாவுக்கு எதிராக 100 நாட்களில் தடுப்பு மருந்தை கண்டறிந்து விடுவோம் எனதகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓமைக்ரானின் வீரியம் மற்றும் இப்போதுள்ள தடுப்பு மருந்துகள் அதைத் தடுக்குமா என்ற முழு விவரம் 4 வார ஆராய்ச்சிக்குப் பிறகே தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, புதிய உருமாறிய கொரோனா அதற்குள் ஜெர்மனி, பிரிட்டனில் தலா இருவர் மற்றும் இத்தாலியில் ஒருவருக்கு கண்டறியப்பட்டிருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
முன்னெச்சரிக்கையாக தென்ஆப்ரிக்கா, போஸ்ட்வானா உள்ளிட்ட ஆப்ரிக்க நாடுகளுக்கு விமான போக்குவரத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தடை செய்துள்ளன.
#WorldNews
Leave a comment