13 7
உலகம்செய்திகள்

சீனாவில் தீவிரமாக பரவும் HMPV… பிரித்தானியாவில் தற்போதைய நிலை

Share

சீனாவில் தீவிரமாக பரவும் HMPV… பிரித்தானியாவில் தற்போதைய நிலை

சீனாவில் பல மாகாணங்களில் தீவிரமாக வியாபித்துவரும் HMPV தொற்றால், உலக நாடுகள் தற்போது கலக்கத்துடன் கண்காணித்து வருகிறது.

HMPV பாதிப்புக்கு தடுப்பூசிகள் எதுவும் இல்லை என்பதுடன், வெளியாகும் தகவல்களில் பெரும்பாலான சீனா மருத்துவமனைகள் பாதிப்புக்குள்ளானவர்களால் நிரம்பியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஆனால் குளிர் காலத்தில் இதுபோன்ற காய்ச்சல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்று என்றே இந்த விவகாரத்தில் சீனா பதிலளித்துள்ளது. இதனிடையே, இந்திய மாகாணமான கர்நாடகா அதிரடி நடவடிக்கையாக HMPV பாதிப்பு அறிகுறிகள் காணப்பட்டால் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், முகக்கவசம் அணியவும் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதுவரை கர்நாடகா மாகாணத்தில் மூவருக்கு HMPV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் HMPV பரவல் தொடர்பில் பிரித்தானியாவில் இதுவரை பெரிய கவலை எதுவும் எழவில்லை என்றே கூறப்படுகிறது.

இருப்பினும் கடந்த 15 நாட்களில் HMPV பாதிப்பு எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது என்றே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றது. மேலும், சீனாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வெளியிடப்படவில்லை. கோவிட் பாதிப்பு எண்ணிக்கை குறித்தும் சீனா இதுவரை உண்மையான தரவுகளை வெளியிடவில்லை.

இருமல், காய்ச்சல், தொண்டை புண், மூச்சுத்திணறல் மற்றும் மூக்கு ஒழுகுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தொடக்கத்தில் காணப்படலாம் என்றே நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாதிப்பு தீவிரமடைந்தால், நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சியாக உருவாகலாம் என்றும் வயதானவர்களுக்கு தீவிர பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சாதாரணமாக லேசான அறிகுறிகளின் காரணமாக, சோதனைகள் பொதுவாக தேவையில்லை, ஆனால் மக்கள் தொடர்ந்து அறிகுறிகளைப் பற்றி கவலைப்பட்டால், அவர்கள் தங்கள் பொது மருத்துவரை நாடலாம் என்றே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...