12 36
உலகம்செய்திகள்

புலம்பெயர்தல் பின்னணி கொண்ட அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி: இந்திய வம்சாவளியினரும் கூட

Share

புலம்பெயர்தல் பின்னணி கொண்ட அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி: இந்திய வம்சாவளியினரும் கூட

அமெரிக்காவின் ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.

பதவியேற்கும் முன்பும், பதவியேற்ற பின்னும், புலம்பெயர்தலுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது குறித்தே பேசிக்கொண்டிருக்கிறார் ட்ரம்ப்.

இந்நிலையில், ட்ரம்பின் மனைவியும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்தான் என்னும் ரீதியில் செய்திகள் வெளியாகிவருகின்றன,

விடயம் என்னவென்றால், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியும் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர்தான்.

அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி, அதாவது, அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான JD வேன்ஸின் மனைவியான உஷா சிலுக்குரி இந்திய பெற்றோருக்கு பிறந்தவர் ஆவார்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த உஷாவின் தந்தையான சிலுக்குரி ராதாகிருஷ்ணாவும் தாய் லக்‌ஷ்மியும் 1980களில் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்கள்.

JD வேன்ஸின் இளமைப்பருவம் மிகவும் பயங்கரமானது. அவரது தாய் போதைக்கு அடிமையானவர். அதனால் குடும்பத்தில் வறுமையும் அடிதடியுமாக அவரது இளமைப் பருவம் கழிந்தது.

அப்படிப்பட்ட சூழலில்தான் யேல் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போது உஷாவை சந்தித்தார் JD வேன்ஸ்.

முதன்முறையாக அவர் உஷாவின் பெற்றோரை சந்தித்தபோது, அவர் அந்த வீட்டில் கண்ட காட்சி அவரது மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டதாம்.

ஆம், எப்போது பார்த்தாலும் அடிதடியும் சண்டையும் நிலவும் வீட்டில் வாழ்ந்து பழகிய JD வேன்ஸுக்கு அமைதியான, அன்பான உஷாவின் குடும்பத்தைப் பார்க்க ஆச்சரியமாக இருந்துள்ளது.

தனது சுயசரிதைப் புத்தகமான Hillbilly Elegy என்னும் புத்தகத்தில் இந்த சம்பவம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார் JD வேன்ஸ்.

அந்த புத்தகம், Hillbilly Elegy என்னும் பெயரிலேயே திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2F7n4ENzjaUwYHj2nMIZLh
செய்திகள்இலங்கை

நுகர்வோர் சட்டம் மீறல்: 8 வர்த்தகர்களுக்கு ரூ. 743,000 அபராதம் – குடிநீர்ப் போத்தலுக்கு அதிக விலை வைத்த வர்த்தகருக்கு 5 இலட்சம் அபராதம்!

நுகர்வோர் சேவைகள் கட்டளைச் சட்டத்தை மீறிப் பொருட்களை விற்பனை செய்த 8 வர்த்தகர்களுக்கு ரூபாய் 743,000...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

மெக்சிகோ சிறப்பங்காடி தீ விபத்து: 23 பேர் பரிதாப பலி; 11 பேர் காயம்!

மெக்சிகோவின் சோனோரா (Sonora) மாகாணத்தில் இயங்கி வந்த சிறப்பங்காடி (Supermarket) ஒன்றில் திடீரென ஏற்பட்ட பாரிய...

1762070899 MediaFile 6
செய்திகள்இலங்கை

நாடளாவிய போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 3 நாட்களில் 1,314 சந்தேக நபர்கள் கைது – ஐஸ், ஹெரோயின் மீட்பு!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் மூலம், கடந்த மூன்று நாட்களில் 1,314...

MediaFile 4
செய்திகள்இலங்கை

யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler)...