11 40
உலகம்செய்திகள்

ட்ரம்ப் வரவால் கலக்கத்தில் உலக நாடுகள்: ஜேர்மனியும் விதிவிலக்கல்ல

Share

ட்ரம்ப் வரவால் கலக்கத்தில் உலக நாடுகள்: ஜேர்மனியும் விதிவிலக்கல்ல

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதுமே, அவர் ஜனாதிபதியானால் என்ன செய்யப்போகிறாரோ என கலங்கிய நாடுகள் உண்டு.

அதற்கேற்றாற்போல, தான் ஜனாதிபதியாக பதவியேற்றதும் கனடா, மெக்சிகோ, சீனா போன்ற சில நாடுகள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்போவதாக கூறியுள்ளார் ட்ரம்ப்.

ஆக, ட்ரம்ப் என்னென்ன வரிகள் விதிக்கப்போகிறார், எவ்வளவு வரிகள் விதிக்கப்போகிறார் என்பது குறித்த கலக்கம் பல நாடுகளுக்கு உள்ளது.

ஜேர்மனியும், அதற்கு விதிவிலக்கல்ல என்றே தோன்றுகிறது.

ஜேர்மனியின் துணை சேன்ஸலரும், அடுத்த சேன்ஸலராகக்கூடும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுபவருமான ராபர்ட் ஹாபேக் (Robert Habeck), ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியமும் ஜேர்மனியும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

ட்ரம்ப் வரிகள் விதிப்பாரானால் ஐரோப்பாவும் பதிலுக்கு அமெரிக்க பொருளாதாரத்தை பாதிக்கும் அளவில் அமெரிக்கா மீது வரிகள் விதிக்கலாம் என்று கூறியுள்ள ராபர்ட், ஆனால், தனது பார்வையில் அது ட்ரம்பை எதிர்கொள்ள தவறான வழிமுறையாகும் என்று கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் ஒன்றிணைந்து அமெரிக்காவுடன் கைச்சண்டை போடலாம், ஆனால், அது இரு தரப்புக்குமே பலனளிக்காது என்று கூறியுள்ள ராபர்ட், அப்படி ஒரு சூழலை தவிர்க்கவே தான் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலாக, ஐரோப்பாவிலும் ஜேர்மனியிலும் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கும், எதிர்கால தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும், காலாவதியான உள்கட்டமைப்பை புத்துயிர் பெறுவதை உறுதிசெய்யவும் அதிக வரிச் சலுகைகள் மற்றும் முதலீடுகள் தேவை என்னும் வாதத்தை முன்வைத்துள்ளார் ராபர்ட்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...