34 1
உலகம்செய்திகள்

ட்ரம்ப் முகத்தை பார்க்க விரும்பவில்லை: அமெரிக்காவிலிருந்து வெளியேறும் பிரபலம்

Share

ட்ரம்ப் முகத்தை பார்க்க விரும்பவில்லை: அமெரிக்காவிலிருந்து வெளியேறும் பிரபலம்

ஜனாதிபதி ட்ரம்ப் (Donald trump) முகத்தை நாள்தோறும் பார்க்கவிரும்பவில்லை, அமெரிக்காவை(us) விட்டு வெளியேறி நியூசிலாந்தில் (new zealand) நிரந்தரமாக குடியேறப் போவதாக பிரபல ஹொலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கமரூன் (James Cameron) கூறியுள்ளார்.

ஹொலிவுட் இயக்குநரான ஜேம்ஸ் கமரூன், டைடானிக், அவதார், டெர்மினேட்டர் என சில வெற்றிப் படங்களை இயக்கி பல ஒஸ்கார் விருதுகளை பெற்றவர் என சாதனை படைத்தவர்.

கனடாவில் பிறந்த இவர், 17 வயதில் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார்.

இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது கொடூரமானது.

ட்ரம்ப் ஆட்சியில் அமெரிக்கா ஒழுக்கமான அனைத்து விஷயங்களில் இருந்தும் விலகுவதாக நான் பார்க்கிறேன்.

அமெரிக்கா எதனுடன் இணைந்திருக்கவில்லை என்றால், அது வரலாற்று ரீதியாக நிற்க முடியாமல் போய்விடும். இது மிக மோசமான யோசனையாக மாறிவிடும்.

தினந்தோறும் வரும் நாளிதழ்களின் முதல் பக்கத்தில் முதல் பக்கத்தை முழுமையாக படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உணர்கிறேன். அதற்குக் காரணம், அது என்னை வேதனைப்பட வைக்கிறது.

நியூசிலாந்து நாளிதழ்களில் சற்று வேறுமாதிரியாக உள்ளது. அங்கு அவர்கள் 3வது பக்கத்திலாவது போடுகிறார்கள். ட்ரம்ப்பின் முகத்தை தினமும் நாளிதழின் முதல் பக்கத்தில் பார்க்க விரும்பவில்லை. இது மீண்டும் மீண்டும் கார் விபத்தை பார்ப்பது போல் உள்ளது.

நியூசிலாந்து நாட்டில் உடனடியாக குடியேற கேட்டு இருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக குடிபெயர்ந்து விடுவேன் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...