எதிரிகளுக்கு பயம் வரும்… பல பில்லியன் இராணுவ நிதியுதவிக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல்

24 6628e0e6d8b99

எதிரிகளுக்கு பயம் வரும்… பல பில்லியன் இராணுவ நிதியுதவிக்கு நன்றி தெரிவித்த இஸ்ரேல்

13 பில்லியன் டொலர் இராணுவ நிதி உதவிக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்ததற்கு இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது, இஸ்ரேலின் எதிரிகளுக்கு கண்டிப்பாக பயத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சமூக ஊடக பக்கத்தில் இது தொடர்பில் கருத்து பகிர்ந்துள்ள அமைச்சர் Israel Katz, இஸ்ரேலுக்கான நிதி உதவியை பெரும்பான்மை ஒப்புதலுடன் நிறைவேற்றியதற்காக அமெரிக்க செனட்டிற்கு நன்றி கூறுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நமது கூட்டணியின் வலிமைக்கு தெளிவான சான்றாக உள்ளது என்றும் நமது எதிரிகள் அனைவருக்கும் இது பயத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

காஸாவில் போர் தொடங்கி 200 நாட்கள் கடந்துள்ள நிலையிலேயே அமெரிக்கா 13 பில்லியன் டொலர் நிதி உதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அக்டோபர் 7ம் திகதி தொடங்கி காஸா மீது மூர்க்கத்தனமான தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்து வருகிறது.

இதுவரை பெண்கள், சிறார்கள் உட்பட 34,183 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸா சுகாதார அமைச்சரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

 

Exit mobile version