இஸ்ரேலின் தாக்குதலை எதிர்கொள்ள தயார்: ஈரான் அதிரடி
இஸ்ரேலின்(Israel) எவ்விதமான தாக்குதலையும் எதிர்கொள்ள ஈரான்(Iran) தயாராக இருப்பதாக அந்நாட்டு இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரான் – தெஹ்ரானில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னதாக கருத்து தெரிவிக்கும்போதே இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானிய இராணுவத்தின் தரைப்படைகளின் தளபதியான கியூமர்ஸ் ஹெய்டாரி வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
மேலும், சாத்தியமான வான்வழி அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஈரான் விழிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் வானத்தில் சந்தேகத்திற்கிடமான பறக்கும் பொருட்கள் தோன்றினால், அவை நமது சக்திவாய்ந்த வான் பாதுகாப்பால் குறிவைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.