3 8 scaled
உலகம்செய்திகள்

தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! கூடும் ஐ.நா பொதுசபை

Share

தாக்குதலைத் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்! கூடும் ஐ.நா பொதுசபை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடர்ந்து வரும் நிலையில் இஸ்ரேல் தீவிரமாகத் தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளதால் அங்கே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுசபையின் 10 வது அவசர சந்திப்பு அக்டோபர் 26 அன்று நடைபெறும் என அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் (Dennis Francis) அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுசபையின் உறுப்பு நாடுகள் அவசர சந்திப்பிற்கு ஐ.நா. பொதுசபைக்கு கோரிக்கை வைத்தன. இக்கோரிக்கையை ஏற்று அவசர கூட்டம் வரும் 26 ஆம் திகதியன்று நடத்தப்படும் என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் டென்னிஸ் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2022 பெப்ரவரி மாதம் தனது அண்டை நாடான உக்ரைனை ரஷ்யா ஆக்ரமித்ததையடுத்து அவசர கூட்டம் நடைபெற்றது.

உலக சூழலுக்கு ஏற்ப 24 மணி நேரத்திலேயே அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க ஐ.நா. பொதுசபைக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் 193 நாடுகளை உள்ளடக்கிய ஐக்கிய நாடுகள் கூட்டமைப்பின் (UNO), 6 முக்கிய உறுப்பு அமைப்புகளில் முக்கியமானது, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை (UNGA). பொதுசபை, 1945ல் ஐ.நா. கூட்டமைப்பின் கொள்கை முடிவுகளை வகுக்கவும், உலக நாடுகளுக்கிடையே சச்சரவு எழும் போது ஐ.நா. சபையின் பிரதிநிதியாக செயல்பட்டு முக்கிய முடிவுகளை எடுக்கவும் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...