rtjy 227 scaled
உலகம்செய்திகள்

இதுவே இறுதி யுத்தம் எக்காளமிடும் இஸ்ரேல்….! போரை திசை மாற்றும் அமெரிக்கா

Share

இதுவே இறுதி யுத்தம் எக்காளமிடும் இஸ்ரேல்….! போரை திசை மாற்றும் அமெரிக்கா

இஸ்ரேலுக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நிறுத்தம் தொடர்பில் எவ்விதகோரிக்கையையும் முன்வைக்கவில்லை என இஸ்ரேலின் அமைச்சர் தெரிவித்தாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற War cabinet கூட்டத்திலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விஜயம் மூலம் காசாவில் போர் நிறுத்தம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவித்தல் வெளியாகி உள்ளது.

மேலும், இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கு எதிரான யுத்தத்தை ”இறுதி யுத்தம்” என தெரிவித்துள்ளதுடன், ஹமாஸ் இயக்கத்தை அழித்தொழிப்பதில் முனைப்புடன் இருந்து வருகின்றது. போருக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரிஷி சுனாக் ஆகியோரது விஜயங்கள் அமைந்துள்ளன.

இதனிடையே, இஸ்ரேலுக்கான இராணுவ உதவியாக 10 பில்லியன் டொலர்களை அனுமதிக்க வேண்டும் என ஜோ பைடன் காங்கிரஸிடம் கேட்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் வெளியானது.

எனினும், இஸ்ரேலுக்கு அழிவுகரமான, நியாயமற்ற ஆயுதங்களை ஜோ பைடன் நிர்வாகம் வழங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து மூத்த அமெரிக்க வெளிவிவகார அதிகாரி ஒருவர் தமது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார்.

இஸ்ரேல் வெடிகுண்டு தாக்குதலால் காசா பகுதியில் இதுவரை 3,700 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்தே அந்த அதிகாரி இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அள்ளித் தருவது என்பது குறுகிய நோக்குடையது, நியாயமற்றது, இதனால் பேரழிவு மட்டுமே ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காசா மருத்துவமனையின் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேலுக்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா, பக்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகள் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளன.

ஐ.நா. மற்றும் அதன் மூத்த தலைவர்களும் இஸ்ரேலின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், காசா மருத்துவமனை மீதான தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.

இஸ்ரேலின் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். சர்வதேச மனிதாபிமான சட்டங்களின்படி மருத்துவமனைகளும், மருத்துவப் பணியாளர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் காசாவில் போர் நிறுத்தத்தை அறிவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா.சபையிடம் 22 நாடுகள் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாடுகளில் வசிக்கும் தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பல்வேறு இடங்களில் அமெரிக்க குடிமக்களுக்கு எதிராக பயங்கரவாத தாக்குதல்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடத்தப்படலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இது தொடர்பான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...