rtjy 2 scaled
உலகம்செய்திகள்

தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்

Share

தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்

இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசா முனையில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக பாலஸ்தீனிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது.

போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாவில் தரைவழி தாக்குதலையும் ஆரம்பித்துள்ளது.

மேலும், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் வான்வெளி தாக்குதலை நடத்திவருகின்றனர்.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவினர் இடையே சுமார் 7 வாரங்களாக போர் நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதலில் காசாவில் சுமார் 12,000த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், இஸ்ரேலை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 4 நாட்களில் ஹமாஸ் தரப்பில் பணயக்கைதிகளாக இருப்பவர்களை விடுவிப்பதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இஸ்ரேல் தரப்பிலும் ஹமாஸ் அமைப்பின் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இரு தரப்பினராலும் போர் நிறுத்தமானது முறையே கடைபிடிக்கப்பட்டதால் மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 6 நாட்கள் போர் நிறுத்தத்தின் பயணாக ஹமாஸ் தரப்பில் 105 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதில் 81 பேர் இஸ்ரேலியர்கள், 23 பேர் தாய்லாந்தை சேர்ந்தவர் மற்றும் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்.

மேலும் 137 பேர் ஹமாஸ் தரப்பினரிடம் பணயக் கைதிகளாக காணப்படுகின்றனர்.

இதனிடையே தற்காலிக போர் நிறுத்தம் இன்று காலை 7 மணியுடன் நிறைவடைந்தது. கட்டார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தரப்பில் போர் நிறுத்தத்தை நீடிக்க இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

எனினும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் மீண்டும் காசாமுனையில் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது.

போர் விமானங்கள் மூலம் காசாவில் இருக்கும் ஹமாஸ் நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும் தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில், போர் நிறுத்தம் விதிமுறையை ஹமாஸ் குழுவினர் முறையாக பின்பற்றவில்லை என்றும், எல்லையில் ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நட்த்தியதால் மீண்டும் இஸ்ரேல் மீண்டும் போரை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுளதோடு, உலக நாடுகள் மத்தியில் மீண்டும் பதற்றம் நீடித்து வருகிறது.

Share
தொடர்புடையது
22 3
செய்திகள்இலங்கை

அயதுல்லா அலி கமேனியின் மறைவு: கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் அமைச்சர் விஜித ஹேரத் இரங்கல்!

ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவு குறித்து இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின்...

20 2
உலகம்செய்திகள்

மில்லியன் கணக்கான மக்கள் திரள்வர் என எதிர்பார்ப்பு: அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு ஒத்திவைப்பு!

அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்ட ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின்...

19 1
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல்: ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழு கடும் கண்டனம்!

ஈரானில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வரும் ஐக்கிய நாடுகள் சபையின்...

18 3
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் சரியானது: அமெரிக்க வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட் அதிரடி!

அல்ஜெசீரா ஊடகத்திற்கு வழங்கிய பிரத்யேக நேர்காணலில், அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் பிரையன்...