tamilni 402 scaled
உலகம்செய்திகள்

ஊடகவியலாளர்கள் இருவரை படுகொலை செய்ய திட்டமிட்டமிட்ட நாடு: அதிரவைக்கும் பின்னணி

Share

ஊடகவியலாளர்கள் இருவரை படுகொலை செய்ய திட்டமிட்டமிட்ட நாடு: அதிரவைக்கும் பின்னணி

லண்டனில் இருந்து செயல்படும் ஈரானிய செய்தி ஊடகம் ஒன்றில் பணியாற்றும் இரு ஊடகவியலாளர்களை படுகொலை செய்ய திட்டமிடப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

சிரியா ஆதரவு ஈரானிய உளவாளிகள் இந்த விவகாரம் தொடர்பில் ஒருவருக்கு 200,000 டொலர் வரையில் அளிக்கவும் முன்வந்துள்ளனர் என கூறப்படுகிறது. அந்த இரு ஊடகவியலாளர்களுக்கும் தாங்கள் குறிவைக்கப்பட்டுள்ளோம் என்பது தெரிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

திருமணம் என ரகசிய குறியீடு அளிக்கப்பட்டு ஈரானிய ஊடகவியலாளர்களான Farhad Farahzad மற்றும் Sima Sabet ஆகிய இருவரையும் படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

ஈரானின் IRGC எனப்படும் புரட்சிகர காவலர் படையின் மூத்த அதிகாரியான Muhammed Abd al-Razek Kanafani என்பவரே, படுகொலைக்கு உத்தரவிட்டுள்ளார். இவர் சிரியா ஜனாதிபதி அல்-அசாத்துக்கு நெருக்கமானவர் என்றே கூறப்படுகிறது.

ஆனால் கடந்த இலையுதிர்காலத்தில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் ஐடிவி செய்தி நிறுவனத்திற்கு திட்டங்களை வெளிப்படுத்த பணம் வழங்கிய நிலையில் இந்த திகிலூட்டும் சதி அம்பலமானது.

ஈரானிய செய்தி ஊடக நிறுவனத்திற்கு வெளியே கார் வெடிகுண்டு பதுக்கி வைக்க வேண்டும் என்று அந்த நபரிடம் ஈரானிய உளவாளிகள் இருவர் கூறியதாகவும், ஆனால், அந்த திட்டத்தை மாற்றிவிட்டு, அவர்களின் குடியிருப்புக்கே சென்று கத்தியால் தாக்கும்படி கூறியுள்ளனர்.

இந்த நிலையில், படுகொலை திட்டம் அம்பலமானதை அடுத்து, Sima Sabet தெரிவிக்கையில், நான் எனது வேலையை சரிவர செய்து வருகிறேன் என்பதற்கு இதுவே சான்று என்றார்.

Share
தொடர்புடையது
25 68f59693a092d
செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!

பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக...

6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...