7 11 scaled
உலகம்செய்திகள்

ஈரானில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்., மொத்தம் நான்கே வேட்பாளர்கள்

Share

ஈரானில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்., மொத்தம் நான்கே வேட்பாளர்கள்

ஈரானில் ஜனாதிபதி தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 58,000க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் உள்ளூர் நேரப்படி காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

கடந்த மாதம் விமான விபத்தில் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) இறந்ததை அடுத்து புதிய ஜனாதிபதியை இத்தேர்தல் தீர்மானிக்கும்.

இத்தேர்தலில் 6 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் ஆனால் வாக்களிக்க சில மணித்தியாலங்களுக்கு முன்னர் 2 வேட்பாளர்கள் தங்கள் பெயர்களை வாபஸ் பெற்றுள்ளனர்.

துணை ஜனாதிபதி அமீர் ஹுசைன் காசிசாதே ஹஷ்மி (Amir-Hossein Ghazizadeh Hashemi) புதன்கிழமை இரவு தனது பெயரை வாபஸ் பெற்றார். புரட்சிப் படையின் ஒற்றுமையை நிலைநாட்டவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன் என்று அவர் கூறினார்.

துணை ஜனாதிபதிக்குப் பிறகு, தெஹ்ரான் மேயர் அலிரெசா ஜகானியும் (Alireza Zakani) பின்வாங்க முடிவு செய்தார். இதனை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அறிவித்துள்ளார்.

இத்தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு 80 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும், கார்டியன் கவுன்சில் தேர்தலில் போட்டியிட 6 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநெஜாத் தேர்தலில் போட்டியிட கார்டியன் கவுன்சில் ஒப்புதல் அளிக்கவில்லை.

மூன்று முறை பாராளுமன்ற சபாநாயகராக இருந்த அலி லரிஜானியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருந்த போதிலும் அவரும் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை. 7 பெண்களும் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்தும் ஒப்புதல் பெறவில்லை.

சயீத் ஜலிலி (Saeed Jalili)
சயீத் ஜலிலி தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் முன்னாள் செயலாளராக இருந்தவர். மேற்கத்திய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையிலான அணு ஆயுதங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் பேராளர். அணு ஆயுதங்கள் தொடர்பாக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை அவர் கொண்டிருந்தார். அவர் அடிப்படைவாத முகாமைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார் மற்றும் அயதுல்லா கமேனிக்கு மிகவும் நெருக்கமானவர்.

முகமது பாக்கர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf)
முகமது பாக்கர் கலிபாஃப் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகராக உள்ளார். அவர் தெஹ்ரானின் மேயராகவும், சக்திவாய்ந்த புரட்சிகர காவலர்களின் தலைவராகவும் இருந்துள்ளார். ஈரான் காவல்துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

முஸ்தபா பூர்மொஹம்மதி
முஸ்தபா பூர்மொஹம்மதி (Mostafa Pourmohammadi) முன்னாள் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் ஆவார். அவர் ஒரு தீவிரமான தலைவர் என்றும் அறியப்படுகிறார், ஆனால் அவர் ஹிஜாப் சட்டத்திற்கு எதிரானவர். ஈரானிய பெண்களை இவ்வளவு கொடூரமாக நடத்தக் கூடாது என்று கூறும் ஒருவர். தான் ஜனாதிபதியானால் ஹிஜாப் சட்டத்தை ரத்து செய்வேன் என உறுதியளித்துள்ளார்.

மசூத் பெசேஷ்கியான்
Tabriz எம்பி மசூத் பெசேஷ்கியான் (Masoud Pezeshkian) மிகவும் தாராளவாத தலைவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அதிபர் ஹசன் ரூஹானிக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். விவாதங்களில் ஹிஜாபை பலமுறை எதிர்த்துள்ளார். தார்மீக காவல்துறைக்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அவர் கூறுகிறார்.

Share
தொடர்புடையது
MediaFile 7 1
உலகம்செய்திகள்

வடக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இவாட் கடற்கரைக்கு சுனாமி எச்சரிக்கை – ஒரு மீற்றர் அலைகள் உருவாகலாம்!

வடக்கு ஜப்பானின் கடற்பரப்பில் இன்று (நவம்பர் 9) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு...

1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...