ரஷ்யாவில் உள்நாட்டு போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அங்குள்ள இலங்கையர்கள் விபரம் தொடர்பில் அவசர அறிக்கை ஒன்றை வெளிவிவகார அமைச்சு கோரியுள்ளது.
மொஸ்கோவில் உள்ள இலங்கை தூதரகத்திடமே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் சுமார் 1500 இலங்கையர்கள் உள்ளதாகவும் அவர்களில் சுமார் 1000 பேர் கல்வி நோக்கத்திற்காக அங்கு சென்ற மாணவர்கள் எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
எஞ்சியவர்கள் அந்நாட்டில் வேலை செய்கிறார்கள், அவர்களில் சிலர் அந்த நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையர்கள் உடனடி கவனம்
எவ்வாறாயினும், நாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு இதுவரை எவ்வித பிரச்சினைகளும் ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கு எதிராக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கூலிப்படையான வாக்னர் ஆயுதக் குழுவானது கிளர்ச்சியைத் தொடங்கிய போது, ரஷ்யாவில் வாழும் இலங்கையர்கள் மீது வெளிவிவகார அமைச்சின் உடனடி கவனம் செலுத்தப்பட்டது.
Leave a comment