இந்தோனேசியா பாண்டன் மாகாணத்திலுள்ள தங்கெராங்க சிறையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தள்ளனர்.
போதைப்பொருள்கள் கடத்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களின் பேரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு அங்கு அடைப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட மின்கசிவால் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருந்தபோதிலும் இந்த தீ விபத்தில் சிக்கி கைதிகள் உட்பட 41 பேர் பலியாகியுள்ளனர்.
படுகாயமடைந்த மேலும் 40 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Leave a comment