tamilni 403 scaled
உலகம்செய்திகள்

இந்திய இளைஞர் லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்பு: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

Share

இந்திய இளைஞர் லண்டனில் நதியிலிருந்து சடலமாக மீட்பு: வெளியாகியுள்ள புதிய தகவல்கள்

லண்டனில் மாயமான இந்திய இளைஞர் ஒருவர் குறித்து குழப்பமான தகவல்கள் வெளியாகிய நிலையில், இன்று, இங்கிலாந்தில் வாழும் அவரது உறவினர் ஒருவர் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கல்வி கற்பதற்காக லண்டன் வந்திருந்த குரஷ்மான் சிங் (Gurashman Singh Bhatia, 23), கடந்த வியாழக்கிழமை, அதாவது, டிசம்பர் 14ஆம் திகதி, நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார்.

மறுநாள், அதாவது, டிசம்பர் 15ஆம் திகதி அதிகாலை 4.20 மணிக்கு லண்டனிலுள்ள South Quay என்னுமிடத்திலுள்ள CCTV ஒன்றில் சிங் கடைசியாக காணப்பட்டுள்ளார்.

சிங் அறைக்குத் திரும்பாததால், காலை 5.48 மணிக்கு, அது குறித்து பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்கள்.

இதற்கிடையில், டிசம்பர் 20ஆம் திகதி, மதியம், South Quayயிலுள்ள நதி ஒன்றிலிருந்து சிங்கின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட, இந்திய ஊடகங்கள் வித்தியாசமான செய்திகளை வெளியிட்டன. டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகம், நேற்று, அதாவது, 21.12.2023 அன்று வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், சிங்கின் குடும்பத்தினர், சிங் உயிரிழந்துவிட்டதாக ஊடகங்களில் வெளியாகிவரும் செய்திகளை மறுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தியாவிலிருக்கும் சிங்கின் சகோதரர் ஒருவரும் நாங்கள் இன்னமும் சிங்கை தேடிக்கொண்டிருக்கிறோம், அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது உண்மையில்லை என்று கூற, குழப்பமான சூழல் காணப்பட்டது.

இந்நிலையில், இங்கிலாந்திலுள்ள பிரைட்டனில் வாழும் சிங்கின் உறவினரான Irendeep Brown என்னும் பெண்மணி, சிங் மரணம் தொடர்பாக சில விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிலுள்ள ஜலந்தரைச் சேர்ந்த சிங், இங்கிலாந்திலுள்ள Loughborough பல்கலையில் முதுகலை பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை, அதாவது, டிசம்பர் 14ஆம் திகதி இரவு, 12.15 மணிக்கு தன் அறைத்தோழர் மற்றும் மூன்று நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

பின்னர், சிங், அவரது நண்பர்கள் இருவர், ஒரு தோழி ஆகியோர் கிறிஸ்துமஸ் அலங்கார விளக்குகளைக் காண்பதற்காக வெளியே சென்றுள்ளார்கள். பின்னர் மற்றவர்களை அவரவர் அறைகளுக்கு அனுப்பிவிட்டு காலாற நடந்து சென்ற சிங், அதிகாலை 4.00 மணியளவில் இந்தியாவிலுள்ள தன் தந்தையை மொபைலில் அழைத்து அவருடன் பேசியிருக்கிறார்.

நதியோரமாக நடந்து சென்ற சிங், தண்ணீரில் விழுந்துள்ளதாக தெரிவித்துள்ள Irendeep, அது ஒரு விபத்து என்றும், சிங்குக்கு நீச்சல் தெரியாது, உறையவைக்கும் குளிர்ந்த நீரில் விழுந்த அவர் உயிரிழந்திருக்கலாம், அது விபத்தேயொழிய, தற்கொலையோ, இனவெறித்தாக்குதலோ அல்ல என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில்,சிங்குடைய ATM அட்டையை யாரோ பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
Screenshot 2025 12 22 110737 1170x800 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைக்கவசம் இன்றி அதிவேகப் பயணம்: மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – வாலிபர் பலி, சிறுவன் உட்பட நால்வர் காயம்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர்...

IMG 2581 1170x658 1
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி எங்கள் சொத்து; விகாரையை அகற்று – யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம், தையிட்டிப் பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையை அகற்றக் கோரியும், அங்கு இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும்...

images 2 7
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி: 11 மாதங்களில் 15,776 மில்லியன் டொலர் வருமானம்!

இலங்கையின் ஏற்றுமதித் துறை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி – நவம்பர்)...

603890102 1355544646614961 2421916803890790440 n
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அம்பாறை கடற்கரையில் இரு பெரிய கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுக்கம்!

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை மற்றும் கல்முனை இடைப்பட்ட கடற்கரைப் பகுதிகளில் இன்று (22) மதியம் இரண்டு...