61b285783ac81.image
செய்திகள்உலகம்

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக இந்தியப் பெண்மணி!

Share
Share

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் புதிய தலைவராக இந்தியப் பெண்மணி பதவி ஏற்கவுள்ளார்.

பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுச்செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகதத்தின் புதிய தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பேராசிரியை நீலி பெண்டாபுடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவர் அப் பல்கலைக்கழகத்தின் முதல் பெண் தலைவர் ஆவார்.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் பிறந்த இவர் அமெரிக்காவில் 1986-ம் ஆண்டு தனது மேற்படிப்பை கற்றவர்.

தற்போது, கென்டக்கியில் உள்ள லூயிஸ்வில்லே பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்துதல் துறை தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

அத்தோடு நீலி பெண்டாபுடி, கல்வித்துறையில் ஏறக்குறைய 30 ஆண்டுகாலம் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நேற்று பென்சில்வேனியா மாநில அறங்காவலர் குழுவால் அவர் ஒருமனதாக அம்மாநில பல்கலைக்கழகத்தின் 19-வது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அடுத்த ஆண்டு பதவி ஏற்பார் என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
6 3
உலகம்செய்திகள்

தரையிறங்கிய துருக்கிய போர் விமானங்கள்! இராணுவ தளவாடங்களை சேகரிக்கும் பாகிஸ்தான்

இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் நிலவும் சூழலில், பாகிஸ்தானுக்கு இராணுவ தளவாடங்களை போர் விமானங்கள் வாயிலாக...

5 4
இலங்கைசெய்திகள்

நாடு முழுவதும் உள்ள ஜனாதிபதி மாளிகைகள் : அநுர அரசு எடுக்கப்போகும் முடிவு

நாடு முழுவதும் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட ஒன்பது பங்களாக்களில் இரண்டை மட்டும் தக்கவைத்துக்கொண்டு மீதமுள்ள பங்களாக்களை பொருளாதார...

4 4
இலங்கைசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குறுகிய கால அவகாசம்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஜனாதிபதி செயலகம் வழங்கிய மூன்று வாகனங்களில் ஒன்றை திருப்பி அனுப்புவதற்கு குறுகிய கால...

3 4
இலங்கைசெய்திகள்

ஸ்தம்பிதம் அடைந்த நாடு: அநுர அரசு மீது பாய்ந்த குற்றச்சாட்டு

கடந்த நிர்வாகத்தின் போது வேகமாக வளர்ச்சியடைந்து வந்த நாடு, தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் காரணமாக ஸ்தம்பிதமடைந்துள்ளதாக...