அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த பயங்கரம்! சகோதரர்கள் இருவர் கைது

24 663d0a2390c3e

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த பயங்கரம்! சகோதரர்கள் இருவர் கைது

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவர் சக நண்பர்களால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹரியானா மாநிலம் கக்சினா கிராமத்தைச் சேர்ந்த நவஜீத் சந்து (22) அவுஸ்திரேலியாவில் கல்வி பயின்று வந்தார்.

அவருடன் சில மாணவர்கள் மெல்போர்ன் நகரில் தங்கி படித்து வந்துள்ளனர். நவ்ஜீத்தின் நண்பர்களான அபிஜித் (26) மற்றும் ராபின் கார்டன் (27) இருவரும் அவருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சகோதரர்களான அபிஜித், ராபின் தனது நண்பரான நவ்ஜீத்தை கடந்த 5ஆம் திகதி கத்தியால் குத்திவிட்டு தப்பியுள்ளனர்.

இதில் நிலைகுலைந்த விழுந்த நவ்ஜீத் அங்கேயே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, நவ்ஜீத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து தப்பியோடிய சகோதரர்களை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்தனர்.

 

Exit mobile version