16 15
உலகம்செய்திகள்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மீண்டும் முறுகல்

Share

தனது அதிகார வரம்பை மீறி, இந்தியாவுக்கு எதிராக செயற்;பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அதிகாரி ஒருவரை, அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவிட்டுள்ளது.

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.

காஸ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது கடந்த 7 முதல் 10ம் திகதி வரை இரண்டு நாடுகளும் போர் ஒன்றில் ஈடுபட்டன.

எனினும், பின்னர் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, தற்போது அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், புதுடில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரக அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், தனது அதிகார வரம்பை மீறி இந்தியாவுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரை, “ஏற்றுக்கொள்ள முடியாதவர்’ என அறிவித்து, அடுத்த 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறுமாறு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது. எனினும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...