பாகிஸ்தானுடன் மோதல்: இந்தியாவின் பல விமான சேவைகள் இரத்து

9 9

இன்று அதிகாலையில் பாகிஸ்தானின்(Pakistan) எல்லைக்கு அருகிலுள்ள பல இடங்களில் இந்தியா இராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பல்வேறு விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

ஜம்மு காஸ்மீரின் முக்கிய விமான நிலையமான ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

அந்த விமான நிலையத்தில்  இருந்து பயணிகள் விமானங்கள் இன்று இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உலகம் முழுவதும் விமானங்களைக் கண்காணிக்கும் Flightradar24 என்ற அமைப்ப. இன்று அதிகாலை ஜம்மு காஸ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வான்வெளியில் விமானங்களே இயங்கவில்லை என்று கூறியுள்ளது.

அதேநேரம் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக அனைத்து முக்கிய இந்திய விமான நிறுவனங்களும் தங்கள் பயணிகளுக்கு விமானங்கள் ரத்து மற்றும் புறப்பாடு மற்றும் வருகையில் ஏற்படக்கூடிய தாமதங்கள் குறித்து அறிவித்து வருகின்றன.

Exit mobile version