ஒமிக்ரொவின் தாக்கம் காரணமாக ஹொங்கொங் சில நாடுகளுக்கு பயணத்தடை விதித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளான அங்கோலா, எத்தியோப்பியா, நைஜீரியா மற்றும் ஷம்பியா போன்ற நாடுகளுக்கே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹொங்கொங்கில் வசிப்பவர்கள் இத்தடை பொருந்தாது எனவும் ஹொங்கொங் அரசு அறிவித்துள்ளது.
அத்துடன் அவுஸ்திரேலியா, கனடா, இஸ்ரேல் மற்றும் 6 ஐரோப்பிய நாடுகளுக்கு கடந்த 21 நாட்களில் பிரவேசித்தவர்களுக்கும் தடை விதிப்பதற்கு ஹொங்கொங் திட்டமிடுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘ஒமிக்ரொன்’ கொரோனா வைரஸ் திரிபு உலகளாவிய ரீதியில் பேராபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்த நிலையில் உலக நாடுகள் பல பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன.
இந்த நிலையில் ஹொங்கொங் அரசாங்கமும் இத்தடையை விதித்துள்ளது.
ஹொங்கொங்கில் வசிப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் முழுமையான தடுப்பூசியைப் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஹொங்கொங்கில் வசிப்பவர்கள் மீள திரும்பும் போது ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவர் எனவும் ஹொங்கொங் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
#world
Leave a comment