பொய் சொல்லி நடித்து பிரித்தானியாவில் புகலிடம் கோருவது எப்படி? வசமாக மாட்டிய இலங்கையர்
பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இந்தியர்களை ‘சித்திரவதைக்கு உள்ளான’ காலிஸ்தானிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் போல் நடிக்குமாறு குடிவரவு வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பாலியல் சித்திரவதை, அடித்தல், பொய்யான சிறைத்தண்டனை மற்றும் கொலை மிரட்டல் போன்ற கதைகளைக் கண்டுபிடித்து புகலிடம் தேடுமாறு ஒரு இரகசிய நிருபருக்கு வழக்கறிஞர்கள் அறிவுரை வழங்குவது பதிவு செய்யப்பட்டது. Daily Mail இந்த முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள குடிவரவு வழக்கறிஞர்கள், பிரித்தானியாவில் தங்குவதற்கான உரிமையை பெற அதிகாரிகளிடம் எப்படி பொய் சொல்வது என்பது குறித்து வாடிக்கையாளர்களுக்கு விளக்கமாக கற்றுக்கொடுக்கின்றனர். இவ்வாறு தவறான தஞ்சம் கோருவதற்கு 10,000 பவுண்டுகள் வசூலிக்கின்றனர்.
1983-ல் இலங்கையிலிருந்து இங்கிலாந்து வந்த வழக்கறிஞர் வி.பி.லிங்கஜோதி, புகலிட கோரிக்கையாளராக காட்டிக்கொண்ட மறைமுக Daily Mail நிருபரிடம், பிரித்தானியாவில் அடைக்கலம் பெறுவதற்காக இந்தியாவில் மோசமாக நடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட காலிஸ்தானிக்கு ஆதரவானவர் என்று காட்டிக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
சிறிய படகில் இங்கிலாந்தில் இறங்கிய பஞ்சாபைச் சேர்ந்த விவசாயி போல் அந்த மறைமுக நிருபர் வழக்கறிஞரிடம் நடித்தார்.
வழக்கறிஞர் வி.பி.லிங்கஜோதி நிருபரிடம் கூறியதாவது, “நீங்கள் காலிஸ்தானிக்கு ஆதரவானவர் என்று இந்திய அரசு குற்றம் சாட்டியது, காவலில் எடுத்து, கைது செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படீர்கள், அதனால்தான் நீங்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொள்ள விரும்பினீர்கள் என்று நீங்கள் கூறலாம்” என்று லிங்கஜோதி கூறியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
புகலிட விண்ணப்பத்தில் பயன்படுத்த ஒரு பின் கதையை உருவாக்க வழக்கறிஞர் 10,000 பவுண்டுகள் கேட்டார். மேலும், சொல்லும் பொய் கதையை ஆதரிக்க ஒரு மருத்துவரின் அறிக்கையை தரவுவதாக உறுதியளித்தார் மற்றும் உளவியல் அதிர்ச்சிக்கான “சான்றாக” உள்துறை அலுவலகத்திற்கு வழங்கப்படும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை தயாரித்தார் என்று மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேபோல் மற்றொரு நிறுவனத்தில், இரகசிய நிருபர் சென்ற இடத்தில், புலம்பெயர்ந்தவர் வீடு திரும்பினால் துன்புறுத்தல் மற்றும் படுகொலை பற்றிய உண்மையான பயம் இருப்பதாகத் தோன்றுவதற்கு ஆதாரங்களை உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர் கூறினார்.
மூன்றாவது வக்கீல், அரசாங்க எதிர்ப்பு அரசியல் விசுவாசம், தவறான சாதியைச் சேர்ந்த ஒருவருடன் காதல் அல்லது ஓரினச்சேர்க்கை போன்ற காரணங்களை உள்ளடக்கிய பொய் காரணங்களை மறைமுக நிருபர் இந்தியாவில் தனது உயிருக்கு அஞ்சுவதாகக் காட்ட அதைப் பயன்படுத்துவதாகக் கூறினார்.
Leave a comment