பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் பதவியை இழந்துள்ளார் இம்ரான் கான்.
அண்மைக்காலமாக பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நிலையில், எதிர்க்கட்சிகளால பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் நேற்று வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் பிரதமர் இம்ரான் கான் வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றில் 342 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 174 வாக்குகள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
பிரதமர் பதவியை இழந்த இம்ரான்கான் ஹெலிகாப்டரில் அவசரமாக வீட்டிற்கு சென்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்ரான் கானை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியுள்ள நிலையில், இம்ரான் கான் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் நோக்கில் நாட்டின் விமான நிலையங்கள் உச்சகட்ட பாதுகாப்பில் உள்ளன.
பாகிஸ்தான் வரலாற்றில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு மூலம் நீக்கப்பட்ட முதல் பிரதமர் இவரென்பது குறிப்பிடத்தக்கது.
#World

