உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் இடித்து தகர்க்கப்பட்ட புராதன இந்து கோவில்

Share
24 661a83250e399
Share

வெளிநாடொன்றில் இடித்து தகர்க்கப்பட்ட புராதன இந்து கோவில்

பாகிஸ்தானில் (Pakistan) புராதான மிக்க இந்து கோயிலொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் (Pakistan) இந்து கோயில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கோயில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் (Afghanistan) – பாகிஸ்தான் (Pakistan) எல்லையையொட்டி கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லாண்டி கோடல் பஜார் நகரில் அமைந்துள்ள ’கைபர் கோயில்’, 1947-ஆம் ஆண்டு முதல் பக்தர்கள் யாரும் வழிபடாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.

காலப்போக்கில் சிதிலமைடைந்து காட்சியளித்த கோயில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுடைய வரலாற்று கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்து மறுசீரமைப்பது, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் பொறுப்பு என பாகிஸ்தான் (Pakistan) இந்து கோயில் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ நிலப் பதிவேட்டில் கோயிலைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை என அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...