24 663223ff94b71
உலகம்செய்திகள்

சீனாவில் திடீரென சரிவடைந்த நெடுஞ்சாலை…19 பேர் உயிரிழப்பு!

Share

சீனாவில் திடீரென சரிவடைந்த நெடுஞ்சாலை…19 பேர் உயிரிழப்பு!

சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை சரிவடைந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் இன்று (01) அதிகாலை 2 மணியளவில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்ஜோவு நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்த மழைவீழ்ச்சி நிலவியதாகவும், இதன் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்ஜோவு நகரில் உள்ள நெடுஞ்சாலை 18 மீட்டர் தூரம் அளவுக்கு சரிந்து விழுந்துள்ளது.

இரவு நேரத்தில் எதிர்பாராத வேளையில் இந்த சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக வந்த 18 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேல் இருந்து கீழே உருண்டு விழுந்து தீப்பிடித்துள்ளன.

அதுமாத்திரமன்றி இச்சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் 30 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

17
இலங்கைசெய்திகள்

ஹலோ மச்சான் ட்ரம்ப்! யாருக்காவது முடியுமா.. இலங்கையில் இருந்து கேள்வி

தொலைபேசி அழைப்பை எடுத்து ஹலோ மச்சான் ட்ரம்ப் என்று யாருக்காவது கதைக்க முடியுமா, அப்படி யாராது...