24 66322b17eefc7
உலகம்செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் வசிக்கவுள்ள மனிதர்கள் ஆனால் வீடு பூமியில்

Share

செவ்வாய் கிரகத்தில் வசிக்கவுள்ள மனிதர்கள் ஆனால் வீடு பூமியில்

செவ்வாய் கிரகத்தில் 45 நாட்களுக்கு நான்கு மனிதர்கள் வசிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட குழுவினர் 45 நாட்களுக்கு எல்லாவற்றையும் விட்டுச் சென்று செவ்வாய் கிரகத்தில் வாழ்வார்கள், ஆனால் இவர்கள் வாழவுள்ள செவ்வாய் வீடு பூமியில் தான் இருக்கும் என கூறப்பட்டள்ளது.

நான்கு தன்னார்வலர்களும் நாசாவின் மனித ஆய்வு ஆராய்ச்சி அனலாக் (Nasa’s Human Exploration Research Analog) பணியின் ஒரு பகுதியாக உள்ளனர் என்றும் இவர்கள் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில் (Nasa’s Johnson Space Center) செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் வாழ்விடத்தை தயாராக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நான்கு தன்னார்வலர்களில் ஜேசன் லீ (Jason Lee), ஸ்டீஃபனி நவரோ (Stephanie Navarro), ஷரீஃப் அல் ரொமைதி (Shareef Al Romaithi) மற்றும் பியுமி விஜேசேகர (Piyumi Wijesekara) ஆகியோர் அடங்குகின்றனர், அவர்கள் செவ்வாய் வாழ்விட பயணப் பணி மே மாதம் 10 -ம் திகதி ஆரம்பமாகி ஜூன் மாதம் 24 -ம் திகதி முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தலை விஞ்ஞானிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும், நாசா விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் ஆழமான விண்வெளிப் பயணங்களுக்கு அனுப்புவதற்கு முன்பு, மனிதர்களை இதுபோன்ற வாழ்விடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

45 நாள் நீண்ட பயணத்தின் போது, ​​செவ்வாய் பரப்பினை ஆய்வு செய்வது, நடந்து பார்ப்பது போன்ற செயற்பாட்டு பணிகளை குழுவினர் மேற்கொள்வார்கள், அத்தோடு இதில் வேர்ச்சுவல் ரியாலிட்டியைப் (virtual reality) பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் “நடப்பதும்” அடங்குகின்றது.

இந்த ஆய்வுகள் ஒவ்வொரு குழுக்களாக முன்னெடுக்கப்படுகின்றது அந்தவகையில் இவர்களுக்கு முன்னர் இந்த ஆய்வினை நடத்த சென்ற குழுவினர் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி அவர்களது ஆய்வுகளை நடத்தி முடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...