பிரித்தானியாவின் கிளாஸ்கோ நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாட்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் பங்கேற்க மாட்டார்
என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி பங்கேற்காமைக்கான காரணம் இதுவரை வெளிப்படுத்தப்படாத போதும், காலநிலை மாற்ற விவகாரம் தமது நாட்டுக்கு
மிகமிக அவசியமானது என ரஸ்யத் தரப்புக்கள் கூறியுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள, ரஸ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ‘துரதிருஷ்டவசமாக, புடின் கிளாஸ்கோவிற்கு செல்ல மாட்டார்.
இருப்பினும் காலநிலை மாற்றம் எங்கள் வெளியுறவுக் கொள்கையின் மிக முக்கியமான முன்னுரிமைகளில் ஒன்று’ என குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய தலைவர்கள் அடுத்த மாதம் பிரித்தானியாவின் கிளாஸ்கோவில் கூடி, அதிகரித்து வரும் உலக வெப்பநிலையை தடுப்பதற்கான புதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்தநிலையில் உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியாளர்களில் ஒருவரான ரஷ்யா, இந்த மாநாட்டில் பங்கேற்காதது உலகளாவிய முயற்சிகளுக்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
#world
Leave a comment