சுகாதார அமைச்சருக்கு தொற்று உறுதி!
பிரேசில் சுகாதார அமைச்சர் மார்சிலோவுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அவையின் கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்த நிலையிலேயே இவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அமைச்சர் மார்சிலோ நலமாக உள்ளார் எனவும், அவருடன் இருந்தவர்கள் எவருக்கும் தொற்று உறுதிசெய்யப்படவில்லை எனவும் பிரேசில் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனேரோ மார்சிலோ ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment