18
உலகம்செய்திகள்

போர் நிறுத்த நடவடிக்கையின் அடுத்த நகர்வு: ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Share

போர் நிறுத்த நடவடிக்கையின் அடுத்த நகர்வு: ஹமாஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

போர் நிறுத்த நடவடிக்கையின், அடுத்த நகர்வாக பாலஸ்தீனக் குழு இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 90 பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக மூன்று இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

அவர்களை (1) விடுவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹமாஸின் ஆயுதப் பிரிவு செய்தித் தொடர்பாளர் அபு உபைதா டெலிகிராம் மூலம் வெளியிட்ட அறிக்கையின்படி,

ஓஃபர் கால்டரோன்(Ofer Kalderon), கீத் சாமுவேல் சீகல்(Keith Samuel Siegel) மற்றும் யார்டென் பிபாஸ்(Yarden Bibas) ஆகியோர் விடுவிக்கப்படவுள்ளனர்.

காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் பிடியில் வைக்கப்பட்டிருந்த மூன்று இஸ்ரேலியர்கள் மற்றும் ஐந்து தாய்லாந்து நாட்டினர் உட்பட 8 பிணைக் கைதிகள் நேற்றுமுன்தினம்(30) விடுவிக்கப்பட்டனர்.

பிணைக் கைதிகள் பரிமாற்ற நிகழ்வின் போது குழப்பகரமானதாக இருந்தது என்றும், கூட்டத்தினர் சில பகுதிகளை முற்றுகையிட்டதால், இஸ்ரேல் பதிலுக்கு 110 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்தது என்றும் கூறப்படுகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஆரம்ப கட்டத்தின் கீழ், ஹமாஸ் ஆறு வார காலப்பகுதியில் மொத்தம் 33 பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும். அதே நேரத்தில் இஸ்ரேல் 737 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமையன்று விடுவிக்கப்படவுள்ள மூன்று பணயக் கைதிகளும் ஒக்டோபர் 7, 2023 அன்று நடந்த தாக்குதல்களில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் அடங்குவர். 35 வயதான யார்டென் பிபாஸ், அவரது மனைவி ஷிரி பாபாஸ் மற்றும் அவர்களது இரண்டு இளம் குழந்தைகள் ஆகியோருடன் கடத்தப்பட்டார்.

இந்நிலையில் தற்போது யார்டென் மட்டுமே அவரது குடும்பத்தில் உயிருடன் உள்ளார்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...